பொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது.
இதனால் இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட நரம்புத்தளர்ச்சி பிரச்சினையை சந்திக்கின்றார்கள்.
குறிப்பாக நரம்புத்தளர்ச்சி ஏற்பட பல காரணம் சொல்லப்படுகின்றது. அதில் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு கை மற்றும் கால் நடுக்கம் ஏற்படும். எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது உடல் சோர்ந்த நிலையில் இருக்கும்.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றுதல் மற்றும் தலைவலியை உண்டாக்கும்.
இதிலிருந்து விடுபட சில உணவுகள் உதவி புரிகின்றது. இவற்றை தவராமல் எடுத்து கொண்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
• அத்திப்பழத்தை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
• பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
• நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுங்கள். மாதுளை பழம் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும், நரம்பு தளர்ச்சியை சரி செய்யும்.
• நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும் உடலுக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாது.
• இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும். எந்த ஒரு செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.
• முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும்.
• பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன் பால் கலந்து சாப்பிடு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெரும்.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.