உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின்றது.
1969 ஆம் ஆண்டில் உலக வெள்ளை பிரம்பு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
44 ஆவது முறையாக இந்த வெள்ளைப் பிரம்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களுடன் சேர்த்து 2 இலட்சம் மக்கள் இலங்கையில் பார்வை அற்றோர்களாய் இருக்கின்றனர்.
இன்று, கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இது தொடர்பான வைபவமும் நடைபெறும்.
சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இந்நிகழ்வில் பங்குகொள்ளும் சகல கண்பார்வை அற்றவர்களுக்கும் வெள்ளைப் பிரம்புகள், இலவச கசெட், வானொலிப் பெட்டிகள், விசேட கைக்கடிகாரங்கள் போன்றவை வழங்கப்படும்.
இலங்கை கண் பார்வை அற்றோர் சேவை சபை , இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.