அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக 100 கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு, கெப்லர் விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலத்தில் இருந்த சக்தி வாய்ந்த டெலஸ்கோப், சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.
அவ்வாறு கிடைத்த புகைப்படங்களை, விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வில் மூலமாக இதுவரை 300 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டென்மார்க்கை சேர்ந்த டெக்னிக்கல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 275 பேர் கொண்ட குழு, சமீபத்தில் 149 கிரகங்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். அவற்றில் 100, புதிய கிரகங்கள் ஆகும். மேலும், இந்த கிரகங்கள் பூமியின் அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.