பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை (SETI) தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது.
இந்த அமைப்பு செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றிற்காக 1,300 க்கும் மேற்பட்ட அன்னிய நட்சத்திரங்களை செய்டி (SETI) ஸ்கேன் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
10,73,741,824 மெகாபைட் தகவல்களை வெளியிட்டு உள்ளது. இது 1,600 ஆண்டுகள் தொடர்ந்து இசை கேட்க கூடிய தகவல் கொள்ளளவு ஆகும்.
பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன எனறு திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நாசா, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தான் வேற்றுக் கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள சமிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
>அரசாங்க தகவல் திணைக்களம்
AD
(Date: 24.06.2019)