மனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு!

எண்ணமும், செயலும் மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயை குணப்படுத்தும் நவீன மருந்தை ரஷிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர், மனதளவில் நினைத்ததை செயல்பட இயலாத மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதற்கான தீர்வை கண்டுபிடிக்க ரஷ்யாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். மனச்சிதைவை குணப்படுத்தக்கூடிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த மருந்திற்கு TAAR1 என குறியீட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, இந்த மருந்தினை எலிகளின் நரம்பு மண்டலத்தில் செலுத்தி பரிசோதித்தனர். அப்போது அவற்றின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதிகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்த முடியும் என, ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்துள்ளார்.

You may also like ...

சூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல் கண்டுபிடிப்பு!

சூரியனும், கோள்களும் காணப்படும் பகுதியில் புதிய அர

வயிற்றுப்போக்கை எளிதில் குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள்

வயிற்றுப்போக்கால் அவதியுற முறையற்ற உணவு முறையே கார

புதிய தொகுப்புகள்