வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்ஆப் பயன்படுத்தி நாம் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு கூட மிக எளிமையாக பேச முடியும், இதற்கு வெறும் டேட்டா மட்டுமே தேவைப்படுகிறது.
ஆனால் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை இன்னும் கொண்டுவரவில்லை வாட்ஸ்ஆப் நிறுவனம். தற்சமயம் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்ய ஒரு செயலி உள்ளது. அது குறித்து காண்போம்.
வழிமுறை 1
Cube Call Recorder ACR என்ற செயலியை கூகுள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வழிமுறை 2
அடுத்து இந்த செயலியை திறந்து next எனும் விருப்பத்தை கிளிக் செய்து பின்னர், செயலியில் மெமரி, மைக்ரோபோன், போன், தொடர்பு எண்கள் போன்ற அனைத்து அனுமதிகளையும் கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 3
பின்னர் வாட்ஸ்ஆப் பகுதியில் ஆட்டோமெடிக் கால் Record செய்ய, Cube Call Recorder ACR செயலியில் autostart எனும் விருப்பத்தை எனேபிள் செய்ய வேண்டும்.
வழிமுறை 4
இதையடுத்து ஸ்மார்ட்போனில் எளிமையாக கால் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற அனைத்து செயலிகளையும் Record செய்ய ஸ்மார்ட்போன் செட்டிங்கிஸ் accessibility பகுதியில் இந்த செயலியை எனேபிள் செய்ய வேண்டும்.
வழிமுறை 5
இதன்பின்னர் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை மேற்க்கொள்ளும் போது எளிமையாக Record செய்யலாம்.