வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி வடிவில் வரும் “Text Bomb" ஒன்று பரவி வருகிறது. அந்த செய்தியை கிளிக் செய்தால் ஏராளமான எழுத்துக்கள் வந்து குவிந்து மொபைல் போனே செயலிழந்துவிடும்.
போனை ரீசெட் செய்தால் மட்டுமே மீண்டும் போனை பயன்படுத்தமுடியும். இது எப்படி செயல்படுகிறது என்றால், முதலில் உங்களுக்கு ஒரு ஃபார்வேர்டு செய்யப்பட்ட செய்தி வரலாம். அதைத் தொடர்ந்து 'This is very interesting (emoji)…Read more.' அதாவது, ”இது மிகவும் இண்ட்ரஸ்டான விடயம் (emoji)… மேலும் காண்க” என்பது போன்ற ஆர்வத்தைத் தூண்டும் ஒரு செய்தி வரும். அது உங்களை கிளிக் செய்யத்தூண்டும்.
தப்பித்தவறி ஒரு ஆர்வத்தில் நீங்கள் அதைக் கிளிக் செய்துவிட்டால் அவ்வளவுதான் ஏராளமான எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெரிய செய்தி வந்து உங்கள் போனே ஃப்ரீஸ் ஆகிவிடும். அதைத் தொடர்ந்து ஆப் செயல்படவில்லை என்ற எச்சரிக்கை செய்தி வரும். இதனால் மொத்த ஆபரேட்டிங் சிஸ்டமும் கிராஷ் ஆகி பின்னர் நீங்கள் ரீபூட் செய்ய வேண்டி வரலாம் - ஒரே சந்தோஷமான விடயம், போன் நிரந்தரமாக எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை என்பதுதான்.
இதேபோல் இன்னொரு செய்தியும் வருகிறது, அதில் இந்த கருப்புப் புள்ளியைத் தொட்டால் உங்கள் வாட்ஸ் ஆப் ஹேங் ஆகி விடும் என்னும் செய்தி வரும். அந்த கரும்புள்ளியை கிளிக் செய்தால் முன் சொன்னது போலவே ஏராளமான எழுத்துக்கள் வந்து போன் ஹேங் ஆகி விடலாம்.
இதேபோன்று இதற்கு முன்பு தெலுங்கு எழுத்து வடிவிலும், அரபி மற்றும் சீன எழுத்து வடிவிலும் கூட “Text Bomb"கள் வந்துள்ளதையடுத்து லேட்டஸ்டாக இந்த வாட்ஸ் ஆப் “Text Bomb" வந்துள்ளது மொபைல் போன் பயன்படுத்துபவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.