வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் UPI கொண்டு செயல்படுத்த படுகிறது. UPI மூலம் பண பரிமாற்றம் செய்வது மிகவும் சுலபமாகவும் உள்ளது.
பண பரிமாற்றத்துக்கு மற்றவர்களுடைய அக்கவுண்ட் நம்பர் தேவையில்லை எனவும், ஒருவருடைய மொபைல் எண் இருந்தால் போதும், மற்றவர்கள் அவர்களுக்கு எளிதில் பணம் மாற்றம் செய்யலாம்.
கூகுள் நிறுவனத்தின் TEZ பண பரிமாற்ற செயலி போட்டியாக தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இவ் வசதியானது வாட்ஸ் ஆப் செயலியின் Setting பகுதியில் தரப்பட்டுள்ளது. இப் பகுதிக்கு சென்று வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களை கொடுத்து ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். தற்போது HDFC, Axis, ICICI, SBI, Yes Bank, Allahabad Bank, Punjab National Bank ஆகிய சில பிரபல வங்கிக்கணக்குகளை மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.