ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும் அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழ்கின்ற நிறுவனமாக சம்சுங் காணப்படுகின்றது.
இந் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களை கவர்வதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக்கை குறிவைத்துள்ளது.
அதாவது சம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Galaxy S7 Edge கைப்பேசிக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.
இதனால் இக் கைப்பேசியில் சில மாற்றங்களை மேற்கொண்டு Samsung Galaxy S7 Edge Olympic Edition எனும் புதிய பதிப்பினை வெளியிடவுள்ளது.
இது தொடர்பான தகவலை Evan Blass என்பவர் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் எதிர்வரும் தினங்களில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.