கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

கூகுள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள Nexus 6 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அப்பிளின் iPhone 6 மற்றும் சம்சுங்கின் Galaxy Note 4 ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வெளியாகியுள்ள நிலையில் கூகுளும் தனது புதிய  கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

5.9 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள  இக்கைப்பேசியில் Qquad-cCore Snapdragon 805 SoC Processor, பிரதான நினைவகமாக  3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ  அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இச்சாதனமானது கூகுளின் புதிய இயங்குதளமான Android L இனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை!

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா

கரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்

முகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி

புதிய தொகுப்புகள்