அண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த சம்சுங் நிறுவனம், Galaxy Ace 4 எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கைப்பேசி 4 அங்குல அளவுடையதும் WVGA TFT தொழில்நுட்பத்தினை கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்து.
மேலும் 3G மற்றும் 4G LTE வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்ட இருபதிப்புக்களாக கிடைக்கக்கூடியதுடன், 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 512MB RAM, சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்காக VGA கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.