மைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமியா 630 முதல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் சந்தையில் விண்டோஸ் மொபைல்களுக்கு தனி இடம் உண்டு. இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளம் கொண்ட லூமியா 630 2 சிம்கார்டு மொபைலை முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளது.

விண்டோஸ் இயங்கு தளத்திலான முதல் இரட்டை சிம் மொபைல் இது. இதன்விலை ரூ.11,500. ஒரு சிம் பயன்படுத்தும் மாடல் ரூ.10,,500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் 4.5 இன்ச் திரை, அதிவேக 1.2 குவாட் கோர் ஸ்நாப் டிராகன் பிராசஸர், 512 எம்.பி. ரேம், 8 ஜிபி போன் மெமரி, 21.1 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகம் அளிக்கும் 3ஜி, பயன்பாட்டுக்கு ஈடுகட்டி நீடித்து நிற்கும் 1830 எம்ஏஎச் பாட்டரி, ஸ்கிராட்ச் ஆவதை தடுக்கும் கொரில்லா கிளாஸ், மெமரி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய வசதி, 5 மெகா பிக்சல் கேமரா, 2 சிம்களிலும் உள்ள மெசேஜ், போன் எண்களை தனித்து காட்ட நிறங்கள் தேர்வு செய்யும் வசதி, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டது.

அறிமுக விழாவில் நோக்கியா இந்தியா மேலாண்மை இயக்குனர் பி.பாலாஜி பங்கேற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘புதிய லூமியா ஸ்மார்ட் மொபைலில் 2 சிம், ஒரு சிம் பயன்பாட்டுக்கென கவர்ச்சிகரமான விலையில் அறிமுகம் செய்துள்ளோம். இந்த விலையில் இது சிறந்த ஸ்மார்ட் மொபைலாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மைக்ரோசாப்டுடன் இணைந்த இந்த முயற்சி, ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் வெற்றி பெறும்’ என்றார்.

You may also like ...

அட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்!

வீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்

IPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ

புதிய தொகுப்புகள்