உலகெங்கும் அறிமுகமாகும் LG F70 LTE ஸ்மார்ட் கைப்பேசி

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது புதிய 70 LTE கைப்பேசி வெளியீடு தொடர்பாக LG நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இதன்படி இந்த வாரத்தில் உலகமெங்கும் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

4.5 அங்குல அளவுடை IPS தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Snapdragon 400 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும், சேமிப்பு நினைவகமாக 4GB அல்லது 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கென VGA கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

You may also like ...

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி!

சாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை

100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி!

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்

புதிய தொகுப்புகள்