முபாரக் டெக்ஸ்டைல்ஸ் இன் 3வது காட்சியறை வெகு விரைவில் மட்டக்களப்பில்

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின், நேத்ரா அலைவரிசை சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் ஒழுங்கு செய்திருந்த புத்தாண்டு விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (14) இரவு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இப்பரிசளிப்பு நிகழ்வில் மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ல்ஸ், முபாரக் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் எம்.எஸ்.எம்.முபாரக்,ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
 இதன்போது, இன்றைய விளையாட்டு விழாவில் பல்வேறு துறைகளில் திறமை காட்டிய வீரர்களுக்கான சான்றிதள்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.

இப்பரிசில்களுக்கான அனுசரணையை ,சாய்ந்தமருதில் இரு பெரும் காட்சியறைகளைக் கொண்ட ஜவுளிகளின் சாம்ராஜ்யம் முபாரக் டெக்ஸ்டைல்ஸ் வழங்கியிருந்தது.

 முபாரக் டெக்ஸ்டைல்ஸ் இன் மூன்றாவது காட்சியறை வெகு விரைவில் மட்டக்களப்புக்கு மகுடம் சேர்க்கவுள்ளது குறிப் பிடத்தக்கது.

(எஸ்.அஷ்ரப்கான்)

You may also like ...

சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்!

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத

Sony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்!

Sony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி

புதிய தொகுப்புகள்