சாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. Samsung Galaxy A80 எனும் குறித்த கைப்பேசியானது வழமையை விடவும் அதிகூடிய சேமிப்பு வசதியினை உடையதாக காணப்படுகின்றது.
அதேநேரம் இதில் Pop-Up மற்றும் சுழலும் வசதியினைக் கொண்ட கமெராவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்ஃபி நிலையை செயற்படுத்தியதும் குறித்த கமெரா 180 டிகிரியில் எந்த திசைக்கும் சுழன்று புகைப்படம் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கமெராக்கள் 48 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை கொண்டதாக இருக்கும் எனவும், 3D சென்சார்களையும் உள்ளடக்கியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர 6.7 அங்குல அளவுடைய HD+ Super AMOLED திரை, பிரதான நினைவகமாக 8GB RAM என்பனவற்றினையும் இக் கைப்பேசி கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
>AD
(Date: 21.11.2019)