5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி!

சாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன.

எனினும் எதிர்பாராத விதமாக இக் கைப்பேசியினை அறிமுகம் செய்யாது Galaxy A80 கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

எனினும் தற்போது மீண்டும் Galaxy A90 கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இக் கைப்பேசியானது 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகும்.

தவிர 32 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் திரையானது 6.7 அங்குல அளவுடைய Full HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகும்.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80

சாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட்

சந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold!

சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப

புதிய தொகுப்புகள்