வாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை புகுத்த துடிக்கும் அரசு!

உலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

அதேபோன்று போலியான தகவல்கள், கலவரங்களை தூண்டக்கூடிய தகவல்கள் என்பனவும் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே இதனை தடுப்பதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மாத்திரமன்றி இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதன் ஊடாக இப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என இந்திய அரசு நம்புகின்றது.

அதாவது Finger Print வசதியை புகுத்துவதன் மூலம் போலி தகவல்கள் பரப்புபவர்களை இலகுவாக இனங்காண முடியும் என எண்ணுகின்றது.

இதன்படி ஒவ்வொரு பயனர்களும் Finger Print பயன்படுத்தியே தமது வாட்ஸ் ஆப்பினுள் உள்நுழைய வேண்டும் அப்போது Finger Print இற்கு உரியவர்களின் தகவல்கள் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இருக்கும்.

இப்படியிருக்கையில் போலித் தகவல்கள் பரப்பும் பயனர் பேக் ஐடியில் இருந்தாலும் அவரது ஐடியை கொடுத்து Finger Pirnt மூலம் உண்மையான விபரங்களை திரட்ட முடியும்.

எனினும் இவ் வசதியை பயனர்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

வாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு!

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன

வாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி?

மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை

புதிய தொகுப்புகள்