சாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ...

சாம்சுங் நிறுவனமானது இவ்வருட ஆரம்பத்தில் 3 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றது. Galaxy S10, S10 Plus மற்றும் Galaxy S10E ஆகிய கைப்பேசிகளே அவையாகும்.

இவற்றில் Galaxy S10 கைப்பேசியானது இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட சாம்சுங் கைப்பேசிகளினை விடவும் மிக வித்தியாசமான சிறப்பம்சங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இதன்படி முதன் முறையாக 5G இணைய வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்படுகின்றது.

இவை தவிர 4 பிரதான கமெராக்கள், தொடுதிரையில் அமைந்த கைவிரல் அடையாக ஸ்கானர் மற்றும் 1TB சேமிப்பு நினைவகம் என அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது.

இதேவேளை 3 கைப்பேசிகளினதும் விலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் S10E கைப்பேசியானது 750 டொலர்கள் ஆகவும், Galaxy S10 கைப்பேசி 900 டொலர்கள் ஆகவும், S10 Plus கைப்பேசியானது 1000 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

You may also like ...

முதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா? சூப்பர் டிப்ஸ் இதோ...

பொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி!

சாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை

புதிய தொகுப்புகள்