Sony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்!

Sony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

5.7 அங்குல அளவு, 1440 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

எனினும் இது எவ்வகையானது Processor இனை கொண்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கூகுளின் அன்ரோயிட் 8.1 ஓரியோ இயங்குளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் குறித்த கைப்பேசியில் 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலை 200 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

சாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்!

ஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி

இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்!

மைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ

Also Viewed !

புதிய தொகுப்புகள்