சாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்!

பிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இம்மாத இறுதியில் Galaxy S10 Series Black Sheep போன்களை அறிமுகம் செய்யவுள்ளது, இந்நிலையில் இந்த போனில் Selfie Camera டிஸ்பிளேவில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் Galaxy S10ல் ஒற்றை செல்ஃபி கேமராவும், Galaxy S10 Plus ஸ்மார்ட்போனில் இரு செல்ஃபி கேமராக்களும் வழங்கப்படுகிறது, பின்புறம் ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா வழங்கப்படுகிறது.

In- Display Sensor-வுடன் வால்யூம் ராக்கரின் கீழ் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் வழங்கப்படுகிறது.
 
புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 2960x1440 பிக்சல் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 9820 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுகிறது.

புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்படலாம் என கூறப்படுகிறது.

நிறங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 சீரிஸ் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

You may also like ...

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி!

சாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை

சந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold!

சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப

புதிய தொகுப்புகள்