பிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்துள்ளது.
புதிய OPPO K1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6-ஆம் திகதி அறிமுகமாக இருக்கிறது.
இதற்கு இந்த ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகமானது. OPPO K1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 AIE, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி.செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
OPPO K1 போனின் சிறப்பம்சங்கள்:
• 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே.
• ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
• அட்ரினோ 512 GPU
• 6 ஜி.பி. ரேம் / 4 ஜி.பி. ரேம்
• 64 ஜி.பி. மெமரி
• மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
• ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
• டூயல் சிம் ஸ்லாட்
• 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
• 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
• 25 எம்.பி. செல்பி கேமரா
• இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
• டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
• - 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்த போன்கள் வோன் கோ புளூ, மோக்கா ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு 20,000 ரூபா என ஏற்கனவே ஓப்போ அறிவித்திருந்தது.