முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG விரைவில் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் LG G7 ThinQ எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் LG G8 ThinQ எனும் மற்றுமொரு கைப்பேசியினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 6.1 அங்குல அளவுடைய QHD+ திரையினையும், Qualcomm Snapdragon 855 Processor மற்றும் பிரதான நினைவகமாக 6GB RAM என்பவற்றினையும் கொண்டுள்ளது.
எனினும் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தகவல்கள் பெப்ரசரி 25 ஆம் திகதி மற்றும் 28 ஆம் திகதிகளில் பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.