கைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி

ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக கைப்பேசி விற்பனையில் முன்னணியில் திகழும் நிறுவனமாக ஹுவாவி விளங்குகின்றது.

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் கைப்பேசி விற்பனையில் இவ் வருடம் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது

அதாவது சுமார் 200 மில்லியன் கைப்பேசிகளை இவ்வருடம் ஏற்றுமதி செய்துள்ளது.
இது கடந்த வருடத்தினை விடவும் பல மில்லியன்கள் அதிகமாகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் 153 மில்லியன் கைப்பேசிகளை ஏற்றுமதி செய்திருந்தது.

இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த P20 மற்றும் Mate 20 கைப்பேசிகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றன.

குறுகிய காலத்தில் 16 மில்லியன் P20 கைப்பேசிகளும், 5 மில்லியன் Mate 20 கைப்பேசிகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

You may also like ...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த

சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்!

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத

புதிய தொகுப்புகள்