புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண்டமான தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.
இச் சேவையில் சில வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது குரல் வழி குறுஞ்செய்திகளை நேரடியாக அனுப்பும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இச் செய்தியானது ஆகக் கூடிய ஒரு நிமிடங்கள் வரை நீளமானதாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில் பகிரப்படும் வகையில் இவ் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
iOS மற்றும் Android சாதனங்களில் இவ் வசதியை பெற முடியும். இதற்காக இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம்.