48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்!

தற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பயனர்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சோனி மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் 48 மெகாபிக்சல்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

எனினும் முந்திக்கொண்ட ஹுவாவி நிறுவனம் தனது புத்தம் புதிய Honor கைப்பேசியினை 48 மெகாபிக்சல்கள் கொண்ட கமெராவுடன் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கிடையில் Xiaomi உம் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவுடன் அறிமுகமாகவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு கைப்பேசிகளும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You may also like ...

100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி!

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்

சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்!

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத

புதிய தொகுப்புகள்