ஆப்பிள் நிறுவனம் இன்னும் இரு வருடங்களில் 5G வலையமைப்பில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் முகமாக மற்றுமொரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இத் தகவலின்படி 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட மொடெம்களை இன்டெல் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் Samsung, Nokia / HMD, Sony, Xiaomi, Oppo, Vivo, HTC, LG, Asus, ZTE, Sharp, Fujitsu, மற்றும் OnePlus போன்ற கைப்பேசி நிறுவனங்கள் தமது கைப்பேசிகளுக்கான 5G மொடம்களை Qualcomm நிறுவனத்துடன் இணைந்து வடிமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கசிந்துள்ளது.
விரல் இடைகளுக்குள் அடக்கக்கூடிய அளவிற்கு சிறிதாக இருக்கும் 5G தொழில்நுட்ப மொடெம்கள் 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.