பேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட் செய்தவற்கும் மெசஞ்சர் எனும் மற்றுமொரு அப்பிளிக்கேஷன் இருக்கின்றமை தெரிந்ததே.
மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்றினை பேஸ்புக் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஒருவருக்கு அனுப்பப்பட்ட செய்தி அவரை சென்றடையாது இருக்கும்போது தேவைக்கு ஏற்றாற்போல் அச் செய்தியினை நீக்க முடியும்.
எனினும் இதற்கு நேர வரையறை தரப்பட்டுள்ளது. இதன்படி செய்தி அனுப்பியதிலிருந்து 10 நிமிடங்களுக்குள் அச் செய்தியை நீக்க வேண்டும்.
இப் புதிய வசதியினை iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெசஞ்சரின் 191.0 புதிய பதிப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.