உலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் விளங்கி வருகின்றது.
பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இச் செயலியில் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ஸ்டிக்கர்கள் எதிர்வரும் வாரமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும் இப் புதிய ஸ்டிக்கர்களை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
அன்ரோயிட் சாதனங்கள் வைத்திருப்பவர்கள் இவ் வசதியை பெறுவதற்கு வாட்ஸ் ஆப்பின் 2.18.329 பதிப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
அதேபோன்று iOS பாவனையாளர்கள் 2.18.100 பதிப்பினை அப்டேட் செய்ய வேண்டும்.
மொத்தமாக 12 ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.