லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூளையை, உடலின் நிணநீர்த் தொகுதியுடன் இணைக்கும் புதுவகை நிணநீர் நாளங்களை கண்டுபிடித்துள்ளனர்.
முன்னர் இவ்விரு தொகுதிகளுக்குமிடையில் தொடர்புகள் இல்லை யெனவே விஞ்ஞானிகள் கருதியிருந்தனர்.
இக் கண்டுபிடிப்பானது நிணநீர்த் தொகுதியானது எவ்வாறு எமது மூளையினையும், எமது நடவடிக்கையையும் பாதிக்கின்றது என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும் என நம்பப்படுகிறது.
இது பற்றி Virginia பல்கலைக்கழக தலைமை ஆய்வாளர் Jonathan Kipnis கூறுகையில், இது போன்ற கட்டமைப்புக்கள் உடலில் இருக்குமென தாம் நம்பியிருக்கவில்லை என்கிறார்.
முதன் முதலில் இவ் நிணநீர்க் கலன் தொடர்பில் கடந்த வருடம், யூன் அளவில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனாலும் அவை நியூரோ சயன்ஸ் துறையை தவிர வெளியில் அவ்வளவாக கவனிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும் கடந்த வாரம் வெளியான, நிணநீர்க் கலன்கள் நமது சமூக நடத்தையை கட்டுப்படுத்துகின்றன என்ற தகவலானது தலைப்புச் செய்திகளாக வெளியாகியிருந்தது.
நிணநீர்த் தொகுதியானது வெண்குருதிக் கலங்களையும், நிணநீர்க் கலங்களையும் காவும் நாளங்களால் ஆக்கப்படுகிறது.
இது இழையங்களுக்கும், குருதித் தாயத்துக்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்துகின்றது, குருதியிலிருந்து இறந்து போன கலங்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
ஆனாலும்பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள், மூளையானது எந்தவொரு நிணநீர்க் கலன்களை கொண்டிருப்பதில்லை எனவும், நிணநீர் தொகுதியுடன் தொடர்புகளை கொண்டிருப்பதில்லை எனவும் நம்பியிருந்தனர்.
ஆனாலும் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் விஞ்ஞானிகள், நிணநீர் கலன்கள் மூளையின் சவ்வுகளிடையே மறைக்கப்பட்டுக் கொண்டிருந்ததை காட்டியிருந்தனர்.
அதனை வெளிக்கொணரவென இம்முறை எலியின் ஒட்டுமொத்த மென்சவ்வுகளையும் ஒரு தனி வழுக்கியில் வைத்து அவதானித்திருந்தனர்.
இதன்போதே மேற்படி நிணநீர்க் கலன்கள் அவதானிக்கப்பட்டிருந்தன.
மேலும் மயக்கப்படுத்தப்பட்ட எலியை சாயமூட்டி எவ்வாறு அத்தகைய கலன்கள் பாயிகளையும், கலங்களையும் காவுகின்றது என வெளிக்கொண்டு வந்துள்ளனர்.