மும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை

இந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ரெஸ்டாரண்ட், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மும்பையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்வதற்கான மாற்று வழியை சிந்தித்த பிரான்சிஸ்கோஸ் பிட்சாரியா தான் இந்த சாதனையை எட்டியுள்ளது.

'ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தும் அமேசான் திட்டங்களை நாங்கள் படித்திருக்கிறோம். அதன்படி, சோதனை முறையில், மும்பையில் உள்ள எங்கள் உணவகத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு 11-ம் தேதி பீட்சாவை வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம்’ என்று உணவகத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் ரஜனி கூறினார். சில ஆண்டுகளில் இந்த ஆளில்லா விமானங்கள் வழக்கமான பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆளில்லா விமானமும் 2000 டாலர் விலை கொண்டது என்று குறிப்பிட்ட ரஜனி, தற்போது இந்த விமானங்கள் 400 அடி உயரத்திற்கு மேலே பறக்க அனுமதி இல்லை என்றும், அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து அதிகார சபையின் விதிமுறைகள் இதற்கு உதவி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

You may also like ...

IPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண

IPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான

புதிய தொகுப்புகள்