Beamdog எனும் ஹேம் டெவெலொப்பர் நிறுவனம் Icewind Dale எனும் புதிய ஹேம் ஒன்றினை எதிர்வரும் 30ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.
இக்ஹேம் ஆனது விண்டோஸ், லினக்ஸ், மக் போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளில் நிறுவிப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த RPG எனும் ஹேமின் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பாக வெளிவரவுள்ளது.
மேலும் இது ஹேம் பிரியர்களை வெகுவாக கவரும் என Beamdog நிறுவனம் தெரிவித்துள்ளது.