எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோம் இதன் எளிமை தான். தேவையில்லாத வசதிகளை குப்பைகளை போல் அடுக்காமல் என்ன வசதி வேண்டுமோ அதை மட்டுமே வெளியிடுவது இதன் சிறப்பு. இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிட்டு உள்ளனர். முழுக்க முழுக்க வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய பதிப்பை உருவாக்கி உள்ளனர்.
எப்பொழுதும் போல தற்போது இதை சோதனை(Beta) நிலையிலேயே விட்டுள்ளனர். க்ரோம் உலவியை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக இணைய வேகத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். டவுன்லோட் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.