இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய வசதி

இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தன் வாடிக்கையாளர்களுக்குப் இந்த புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது.

இந்நிறுவனத்தின் கைப்பேசி இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதற்கென, பி.எஸ்.என்.எல். U2opia Mobile என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த வசதி Unstructured Supplementary Service Data (USSD) என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இது கிடைக்கிறது.

USSD தொழில் நுட்பத்தினை, முன் கூட்டியே பணம் செலுத்தி, பதில் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தலாம். இடம் சார்ந்த தகவல் வசதிகளைப் பெறலாம்.

மெனு வழங்கி அதன் பிரிவுகளுக்கேற்ப வசதிகளைத் தரலாம். தற்போது தொலை தொடர்பு துறையில் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தி வருகின்றனர்.

பி.எஸ்.என்.எல். ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால், இதன் வாடிக்கையாளர்கள், பேஸ்புக் தளத்தினை, தங்கள் கணக்கில், இணைய இணைப்பு பெறாவிடினும் அணுக முடியும்.

குறுஞ்செய்திகளை காண இயலும். நண்பர்கள் விடுத்துள்ள கேள்வி மற்றும் வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்க முடியும். தங்கள் நண்பர்களின் பக்கங்களில் தகவல்கள, செய்திகளை எழுத முடியும்.

பிறந்த நாள் வாழ்த்து குறித்த தகவல்களைப் பெற்று, அதற்கேற்ப வாழ்த்துகளை அனுப்ப முடியும்.

You may also like ...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக

AirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்

ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க

புதிய தொகுப்புகள்