1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை

5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் "5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)' சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ் இன்டர்நெட் வேகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது தற்போதுள்ள வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம். 1 டி.பி.பி.எஸ் வேகம் என்பது எதிர்காலத்தில் ஒரு திரைப்படத்தை 3 நிமிடங்களில் 100 முறை டவுண்லோட் செய்து கொள்ளும் வசதி கொண்டது. இது 4ஜி இன்டர்நெட் டவுண்லோடு வேகத்தை விட 65,000 மடங்கு வேகமானது.

இதற்கு முன் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 5ஜி இன்டர்நெட் வேகம் வெறும் 7.5 ஜி.பி.பி.எஸ் (ஜிகா பைட் பெர் செகன்ட்ஸ்). இது சுரே பல்கலைக்கழக கண்டுபிடிப்பை விட 1 சதவீதம் குறைவு.

இது குறித்து பேராசிரியர் ரஹீம் டபஜூல் கூறியதாவது: 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை தயாரித்தோம். அதில் ஒன்று தான் இந்த 1 டி.பி.பி.எஸ் வயர்லெஸ் இன்டர்நெட். இதே அளவு வேகம் பைபர் கேபிளில் உள்ளது. ஆனால் நாங்கள் இதனை வயர்லெஸ்சில் கொண்டு வந்துள்ளோம். எங்களது ஆய்வக சூழ்நிலைப்படி 100 மீட்டர் தூரத்தில் வைத்து இதனை சோதித்து பார்த்துள்ளோம். இன்னும் பல சோதனைகள் செய்து இதனை வெளிச்சந்தைக்கு கொண்டு வருவோம். 2018ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

You may also like ...

100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்!

100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன

Wi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

MIT - Massachusetts Institute of Technology நிறுவன

புதிய தொகுப்புகள்