இனி டென்சன் இல்லை!! 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி

பொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் இது இன்றைய சமூகத்தினருக்கு கவலையானதுதான்.

அதனாலோ என்னவோ, குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானதாம்.

இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இது 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும், இந்த பேட்டரி மூலம், 5 மணி நேரம் பயன்பெற முடியும்.

எனினும் இந்த அதிநவீன பேட்டரி, சாதாரண பேட்டரிகளை விட குறைவான ஆயுளையே பெற்றுள்ளது மேலும் இந்த பேட்டரிக்கு விலையும் கொஞ்சம் அதிகம்தான்.

அதன்படி இந்த பேட்டரியுடன் கூடிய செல்போனுக்கு, சாதாரண விலையை விட கூடுதலாக 50 டாலர் (சுமார் ரூ.3000) அதிகம் செலுத்த வேண்டும்.

தற்போது சந்தையில் விற்பனை செய்யக்கூடிய செல்போன்களில், இந்த பேட்டரியை இணைக்க வேண்டுமென்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை!

மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ

Also Viewed !

புதிய தொகுப்புகள்