கூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு

கூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

சுமார் 600 மில்லியன் பவுண்ட்ஸ் செலவினை அடிப்படையாகக் கொண்ட இந்த விரிவாக்கற் திட்டத்தில் 1000 இற்கும் அதிகானமவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் 150 இற்கும் அதிகமானவர்கள் முழுநேர வேலை மற்றும், ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படவுள்ளனர்.

இவர்களில் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், இலத்திரனியல் நிபுணர்கள், இயந்திரவியல் பொறியியலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்வர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை இந்த விரிவாக்கற் திட்டமானது 2016ம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு 2017ம் ஆண்டின் இறுதியில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

You may also like ...

கூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

கூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க

அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு

அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி

புதிய தொகுப்புகள்