அப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்

உலக அப்பிள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக‌ நேற்றைய தினம் iPhone 6 மற்றும் iPhone 6+யினை அறிமுகப்படுத்தியது அப்பிள்.

அப்பிள் அறிமுகப்படுத்திய அனைத்து உற்பத்திகளும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளமை யாவரும் அறிந்தது.

அந்த வகையில் அப்பிள் கைக்கடிகாரங்களும் பெரும் வரவேற்பை பெருமென நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் டிம் குக் தெரிவித்துள்ளார்.

இக்கைக்கடிகாரம் 1.5 அங்குலத்தில் தொடு திரை வசதியுடன் ப்ளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கைக்கடிகாரத்தினை ப்ளூடூத் மூலம் iPhone 5, 5C, 5S, 6 மற்றும் 6+ ஆகியவற்றுடன் இணைக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த கடிகாரம் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IOS மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு வகையான வடிவங்களில், இலகுவாக கழற்றி மாட்டக்கூடிய வகையிலான பட்டியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கைக்கடிகாரம்.

மேலும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் (stainless steal) அலுமினியம் (aluminium Watch Sport ) மற்றும் 18 கரட் தங்கம் ஆகிய மூன்று உலோகங்களில் அப்பிள் கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

iPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்

புதிய தொகுப்புகள்