தூக்கத்தை கண்காணிக்க புதிய சாதனம் உருவாக்கம்

தொழில்நுட்ப வளர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் அளப்பரிய பங்கு வகிப்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இவற்றின் வரிசையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க பல்வேறு அப்பிளிக்கேஷன்கள், கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஒருவரின் தூக்கத்தை கண்காணிக்கக்கூடிய Sense எனும் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய இந்த கருவியானது ஒருவருடைய தூக்க மாதிரி, தூங்கும் சூழல் என்பவற்றினை துல்லியமாக அறிந்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கின்றது.

அதாவது தூங்கும் சூழலிலுள்ள சத்தங்கள், வெளிச்சம், வெப்பநிலை, காற்றிலுள்ள ஈரப்பதம், துணிக்கைகள் என்பவற்றினை அறிந்து கொள்கின்றது.

இந்த அளவீடுகளில் இருந்து குறித்த இடம் நிம்மதியாக தூங்குவதற்கு வசதியானதா என அறிந்து கொள்ள முடியும்.

You may also like ...

ஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்

வாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்

விண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்

புதிய தொகுப்புகள்