Language :     Englishதமிழ்

அசத்தலோடு வருகின்றது 5 லட்சம் ரூபாயில் 'ரெனோ கிவிட்'

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்னும் கான்செப்ட் கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நான்கு மீட்டர் எஸ்.யூ.வி.தான் இந்தியாவின் எதிர்காலம் என கிட்டத்தட்ட எல்லா கார் தயாரிப்பு நிறுவனங்களும் முடிவெடுத்துவிட்ட நிலையில், இது ரெனோவின் முறை என இந்த காரை அறிமுகம் செய்துள்ளார்கள். 4 மீட்டர் இல்லை, 3.62 மீட்டருக்கு உள்ளாகவே இந்த கிவிட் காரை வடிவமைத்து இருக்கிறார்கள் ரெனோ டிஸைனர்கள். ஸ்பேர் வீலை பின்பக்க கதவில் மாட்டி, பிரம்மாண்ட எஸ்.யூ.வி என்று சொல்லாமல், டிக்கிக்கு அடியிலேயே புதைத்து விட்டார்கள். பார்ப்பதற்கு கம்ப்யூட்ர் கேம்ஸ் கார் போலவே இருப்பதால், இந்த காரில் நீங்கள் சென்றால், ஈஸியாக கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கலாம்.

பட்டையான ஹெட்லைட்ஸ், வித்தியாசமான கிரில், பிரம்மாண்டமாக இருக்கும் ரெனோ லோகோ, ஜீப்பில் இருப்பது போன்ற டயர்கள் என கிவிட் மற்ற கார்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. கான்செப்ட் கார் என்றால் அதில் நிச்சயமாக வருங்காலத்துக்கான சிறப்பம்சங்கள் இருக்கவேண்டும் என்பது விதி.

அதன்படி, இந்த காரில் ரியர் வியூ கண்ணாடிகளுக்கு பதில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரியர் வியூ கேமராக்கள், காரின் முன்பக்க மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ளன. 305/50 அளவு கொண்ட டயர்கள், காரின் கேரக்டரை சொல்கின்றன. வீல் கேப்புகளுக்கு பதிலாக இடம் பிடித்திருக்கும் மஞ்சள் வண்ண டிஸைன், கவனத்தை ஈர்க்கிறது. காருக்குள் செல்ல கைப்பிடியை இழுக்கவேண்டாம். ஹாலிவுட் படங்களில் பார்ப்பதுபோல பட்டனை தட்டியவுடன் கதவுகள் மேல்நோக்கி திறக்கின்றன. வீடியோ கேம்ஸ் விளையாட்டை டேஷ் போர்டிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஸ்டீயரிங் வீல் செம ஸ்போர்ட்டியாக டிஸைன் செய்யப்பட்டிருப்பதோடு, டேஷ் போர்டின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இதை வலது பக்க டிரைவிங் அல்லது இடதுபக்க டிரைவிங் என வகைப்படுத்த முடியாது.

ஏ.சி மியூசிக் சிஸ்டம், இண்டிகேட்டர்கள் என எதற்கும் சுவிட்சுகள் இல்லை. எல்லாமே சென்டர் ஸ்கிரீனில் இடம்பிடித்திருக்கும் டச் ஸ்கிரீன் மூலமே செய்யலாம். முன் இருக்கைகளில் மூன்று பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீல் முன்பக்க இருக்கைக்கு நடுவில் இருப்பதால், டிரைவர் நடுவில் உட்கார்ந்து ஓட்ட, இரண்டு பக்கமும் பயணிகள் உட்கார்ந்துகொள்ளலாம். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, இந்த சென்டர் டிரைவிங் பொசிஷன் இருக்க வாய்ப்புஇல்லை. முன்பக்க இருக்கையை முன்னுக்கு தள்ளும் வசதி இருப்பது, பின்பக்க இருக்கைகளுக்குள் நுழைய ஈஸியாக இருக்கிறது.

1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 118 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்துகிறது. 3.6 மீட்டர் சின்ன எஸ்.யூ.வி காருக்கு இந்த சக்தி போதுமானதுதான்.

பெட்ரோல் இன்ஜின் தவிர, எலெக்ட்ரிக் மோட்டாரும் இதில் உண்டு. பிரம்மாண்ட டயர்களை பார்த்துவிட்டு இதை 4 வீல் டிரைவ் கார் என நினைக்கவேண்டாம். 2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், காரை வளைத்து, திருப்பி ஓட்டுவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த கான்செப்ட் கார் அப்படியே விற்பனைக்கு வராது.

2015ம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரஇருக்கும் இந்த காரில், சிக்கன நடவடிக்கைகள் பல இருக்கும். அதனால், இந்த கான்செப்ட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் பல இந்த காரில் நிச்சயம் இருக்காது. ஆனால், காரின் பேஸிக் டிஸைன் இதுதான்.

கான்செப்ட் கார் என்பது, கூட்டத்தை கூட்டும் காராக இருக்குமே தவிர, ஓட்டிப்பார்க்கக்கூடிய காராக இருக்காது என்பதை பொய்யாக்கி இருக்கிறது ரெனோ. ஐந்து லட்சம் ரூபாயில் 'கிவிட்'டை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது ரெனோ.

You may also like ...

12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்!

மகாத்மா காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த

5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப

புதிய தொகுப்புகள்