360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யும் அதிநவீன கமெரா

வீடியோ பதிவு செய்யும் கமெராக்கள் பொதுவாக குறிப்பிட்ட கோண வீச்சிலேயே உள்ள காட்சிகளை பதிவு செய்யக்கூடியனவாக இருக்கின்றன.

ஆனால் 360 (டிகிரி) கோண வீச்சில் உயர்தர வீடியோ காட்சிகளை பதிவு செய்யக்கூடிய CENTR எனப்படும் சிறிய ரக கமெரா உருவாக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 400 டொலர்கள் பெறுமதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கமெரா தொடர்பான தகவல்கள் தற்போது Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சுமார் 900,000 டொலர்கள் நன்கொடையை எதிர்பார்த்து பிரசுரிக்கப்பட்டுள்ள இச்சாதனம் 24 மணி நேரத்தில் 222,000 டொலர்களை பெற்றுள்ளது.

மேலும் 299 டொலர்கள் செலுத்தி Kickstarter தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

You may also like ...

சாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்!

தொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன

புதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின

புதிய தொகுப்புகள்