iPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானத iPhone 11-ஐ அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய தகவல் கசிந்துள்ளது.

இதன்படி ஐபோனை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் Apple TV 4K இனையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.

இறுதியாக 2017 ஆம் ஆண்டு Apple TV 4K அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நீண்ட இடைவெளியின் பின் புதிய மொடல் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்புதிய தொலைக்காட்சியில் மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தொலைக்காட்சி தொடர்பான எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Date: 07.09.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

அமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி!

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற

புதிய தொகுப்புகள்