சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பறக்கும் ஹெலிகாப்டர்

சுற்றுசூழல் பாதிப்பின்றி சப்தமில்லாமல் பறக்கும் ஹெலிகாப்டரை ஜெர்மனி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஹெலிகாப்டர்கள் புறப்படும்போதும், பறக்கும்போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன. இதனால் தூசு மற்றும் சத்தம் என சுற்றுப்புற சூழலுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவை எதுவும் இல்லாமல் சத்தம் மற்றும் அதிர்வுகள் இன்றி பறக்கும் பசுமை ஹெலிகாப்டரை ஜெர்மனியின் இ–வாலோ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் என்ஜினில் ‘வாலோகாப்டர்’ தொழில் நுட்பம் கலக்கப்பட்டுள்ளது. அது சத்தமின்றி, அதிர்வு இல்லாமல் விண்ணில் பறக்கக்கூடியது. இதையும் இ–வாலோ நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இதற்கு உலக நாடுகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இதில் இருப்பது போன்று, புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டரிலும் 2 பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்த ஹெலிகாப்டர் விமானத்தை போன்று செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, அதே போன்று தரை இறங்கும் தன்மை கொண்டது.

இதன் முதல் சோதனை பயணம் கடந்த 17–ந்தேதி ஜெர்மனியில் உள்ள கரிஷ்ருக் பகுதியில் வெற்றிகரமாக நடந்தது.

You may also like ...

அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது!

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி

நரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த

புதிய தொகுப்புகள்