ஆஸ்திரேலியவில் மாடு மேய்க்கும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தயாரித்துள்ள, மாடுகள் மேய்க்கும், நான்கு கால் "ரோபோ' விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டு வேலை முதல் விண்வெளி ஆய்வு வரையிலான, அனைத்து பணிகளையும் செய்ய, "ரோபோ'க்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த வரிசையில் தற்போது, ஆஸ்திரேலியாவின், சிட்னி பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மாடுகளை மேய்க்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். "ரோவர்' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த ரோபோ, காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது முதல், மாலையில் பண்ணைக்கு அழைத்து வந்து, பால் கறப்பது வரையிலான அனைத்துப் பணிகளையும் செய்கிறது. நிதானமான வேகத்தில், இந்த ரோபோ செல்வதால், மாடுகள் அதைப் பின் தொடர்ந்து செல்கின்றன.

பால் கறப்பதற்கு, ஏற்கனவே ரோபோக்கள் இருந்தாலும், பால் கறக்கும் பணியில், ரோவரின் செயல்பாடு குறித்து ஆராயப்பட்டுள்ளது. பழ மரங்கள் மற்றும் விவசாய பண்ணைகளை கண்காணிப்பதற்கு, ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ""தற்போது, இந்த ரோபோவை, மனிதர்கள் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; வருங்காலங்களில், சுயமாக இயங்கும் வகையில், ரோபோக்கள் மேம்படுத்தப்படும்,'' என, சிட்னி பல்கலை கழக விஞ்ஞானி, கேன்ட்ரா கெரிஸ்க் கூறியுள்ளார்.

You may also like ...

சீனாவின் ரோபோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது

சந்திரனுக்கு முதற்தடவையாக அனுப்பிய ரோபோ விண்கலம் வ

ஆரம்பப் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக ரோபோ

பின்­லாந்து ஆரம்பப் பாட­சா­லை­யொன்று மொழி ஆசி­ரி

புதிய தொகுப்புகள்