ஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்

வாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் உலக அளவில் பாரிய வரவேற்பைப் பெற்றிருந்த ஸ்கைப் ஆனது மீண்டும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது.

வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றிற்கு நிகரான வசதிகளை ஸ்கைப்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் உள்ளடக்குவதே காரணம் ஆகும்.

இந்த வரிசையில் குழு அழைப்பு வசதியில் மற்றுமொரு மாற்றத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உள்ளடக்கவுள்ளது.

அதாவது தற்போது 25 பேர் வரை ஒரே நேரத்தில் குழு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.

இந்த எண்ணிக்கையை 50 வரை உயர்த்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கான பரீட்சார்த்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சிப்பு வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You may also like ...

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்!

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக

துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்!

சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்

புதிய தொகுப்புகள்