மைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
இதில் HD வீடியோ அழைப்பு செய்யக்கூடிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ் வசதி தனி நபர் அழைப்பிற்கும், குழு அழைப்புகளுக்கும் பொருந்தும்.
தவிர அழைப்புக்களை பதிவு செய்யும் வசதி (Recording), நோட்டிபிக்கேஷன் பேனல், உரையாடல்களை தேடும் வசதி, சட்டிங்கின்போது பரிமாறப்பட்ட புகைப்படங்கள், இணைப்புக்கள் என்பவற்றினை காண்பிப்பதற்கான கேலரி என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும் கணினிகள் மற்றும் கைப்பேசிகளில் நிறுவிப் பயன்படுத்தக்கூடிய புதிய பதிப்பு இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.