அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்கேஷனின் குழு அழைப்பில் உள்ள குறைபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இக் குறைபாட்டினை அமெரிக்காவினைச் சேர்ந்த 14 வயது சிறுவனே கண்டுபிடித்துள்ளான்.
Grant Thompson எனும் குறித்த சிறுவனுக்கு ஆப்பிள் நிறுவனம் தற்போது இன்ப அதிர்ச்சி ஒன்றினை கொடுத்துள்ளது.
அதாவது குறித்த சிறுவனின் எதிர்கால படிப்பிற்கான செலவினை முழுமையாக ஏற்றுள்ளது.
எனினும் எவ்வளவு தொகையை வழங்கவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை தற்போது FaceTime அப்பிளிக்கேஷனில் காணப்பட்ட குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டு புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.