ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் ஆப்பிள் நிறுவனமும் ஏற்கனவே இணைந்து சில சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது. தற்போது Beddit எனப்படும் மற்றுமொரு சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
இச் சாதனமானது ஒருவரின் தூக்கத்தினை கண்காணிக்கும் சாதனமாக காணப்படுகின்றது.
மிகவும் மெல்லியதாக இருக்கும் இச் சாதனத்தை பெட்சீட்டின் கீழாக வைத்திருந்தால் போதும். தூக்கத்தினை மாத்திரமன்றி இதயத்துடிப்பு வீதம், குறட்டை தொடர்பான தகவல்கள் மற்றும் படுக்கை அறையிலுள்ள வெப்பநிலை என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும்.
இதன் விலையானது 150 டொலர்கள் ஆகும்.