Language :     Englishதமிழ்

முப்பரிமாண அச்சு இயந்திரத்தை விண்ணுக்குச் செலுத்தும் நாசா

விண்வெளியில் நிகழும் பூச்சிய ஈர்ப்பு (Zero gravity) விசையில் விண்வெளி வீரர்கள் தாம் பாவிக்கும் கருவிகளையும் உபகரணங்களையும் எளிதாகத் தயாரிக்க உதவும் வகையில், 2014 ஆம் ஆண்டு விண்ணுக்குத் தனது முதலாவது முப்பரிமாண அச்சு இயந்திரத்தை (3D printer) நாசா செலுத்தவுள்ளது.

இதன் மூலம் வருங்கால விண்வெளித் திட்டங்களின் செலவினைப் பெருமளவு குறைக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாசா மற்றும் பிற நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் கூட்டு முயற்சியால் விண்ணில் நிறுவப் பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ISS இல் இந்த 3D பிரின்டரைப் பாவித்தால் அதன் வருங்கால திட்டங்களின் செலவு குறைவதுடன் திரும்பத் திரும்ப ISS இற்குச் செல்லவுள்ள பயணத் தேவைகளையும் இது குறைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் 3D பிரின்டர் எனும் இந்த உபகரணம் விண்ணுக்குச் செலுத்தப் படும் போது ராக்கெட் அதிர்வுகளைத் தாங்கக் கூடியதும் விண்வெளியில் கட்டுக் கோப்பான ஆராய்ச்சி நிலையங்களில் பாதுகாப்பாகச் செயற்படுவதும் என இரு தேவைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் நாசா மைக்ரோவேவ் (microwave) அளவுடைய 3D பிரின்டரை உருவாக்கக் கூடிய வகையில் தொழிநுட்பங்களைத் தெரிவு செய்யவுள்ளது. விண்வெளியில் அமைந்துள்ள ISS உட்பட ஆய்வு நிலையங்களுக்குப் பொதுவாக வீரர் ஒருவர் பூமியில் இருந்து புறப்படும் போது ஒரே தடவையில் அனைத்து கருவி உபகரணங்களையும் கொண்டு செல்வது இயலாத காரியம் எனவும் ஆனால் இப் பிரச்சினையை 3D பிரின்டர் இலகுவில் தீர்த்து விட வல்லது எனவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ISS வரை 3D பிரின்டரைக் கொண்டு சென்று அங்கு வைத்து தமக்குத் தேவையான செய்மதிகளைப் பிரிண்ட் எடுத்து அவற்றைத் தனியாக விண்ணில் உலா வரச் செய்வதுடன் குறித்த பிரின்ட் செய்யப் பட்ட செய்மதிகளில் இருந்து பூமிக்குத் தகவல்களைப் பெறுவதற்கும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பொதுவாக 3D பிரின்டர்கள் பாலிமர் மூலக்கூறுகளின் உதவியுடன் 3D உருவங்களைப் பிரின்ட் செய்யும். ஆனால் மிக உறுதியான பதார்த்தத்தால் ஆன பொருட்களைப் பிரின்ட் செய்து எடுப்பதற்கு லேசர் கதிரினால் உருக்கப் பாட்ட டைட்டேனியம் மற்றும் நிக்கல் குரோமியம் துகள்கள் ஆகியவை மூலப் பொருட்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்.

 

You may also like ...

நாசா விண்வெளி வீரராக பணியாற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்!

புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டத்தில் விண்வெள

2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ

புதிய தொகுப்புகள்