கூகுளின் மாறப் போகும் தேடல் முடிவுகள்!

இருபது வயதை எட்டிய உலகின் பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் இனி தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்ப இணையதளமான 'மஷாபிள்' செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், முன்பு போலவே இனியும் கூகுளின் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் முறையில் மாற்றம் வரவுள்ளது.

மேலும் சமூக வலை தள நிறுவனங்கள் போல இனி தேடல் முடிவுகளில் நியூஸ் பீட்கள், செங்குத்து வடிவ வீடியோக்கள், புகைப்படங்களுடன் இணைந்த தகவல்கள் மற்றும் நிறைய கதைச் செய்திகள் ஆகியன காண்பிக்கப்படும்.

அத்துடன் தனிப்பட்ட பயனாளர்களின் தேடுதல் விபரங்களின் தொகுப்பு மற்றும் விருப்பத் தேர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து 'டிஸ்கவர்' என்னும் பிரத்யேக பீட் இணைக்கப்படவுள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய உலகின் மிகவும் பிரபலமான தேடுபொறி நிறுவனமாக விளங்க வரும் கூகுள் தேடல் 1998.09.04 அன்று லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு நண்பர்களால் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

கூகுளின் Duo அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்

வீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Du

கூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்!

கடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன

புதிய தொகுப்புகள்