கால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட ஆப்பிள் நிறுவனம் தற்போது பல நாடுகளிலும் அறியப்பட்ட முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையே இம் மைல் கல் எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ட்ரில்லியன் டாலர் பெறுமதியை எட்டிய முதலாவது பொது நிறுவனமாகவும் ஆப்பிள் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் வெளியிட்டுள்ளார்.